வெற்றி நிச்சயம் ! - From Happy Jobs - Madurai December - 18,2019

நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள் என மற்றவர்கள் எதிர்பார்க்கும் வண்ணம் உங்கள் பேச்சு இருக்க வேண்டும்.

உங்கள் வாழ்க்கையின் கனவின் மீது எப்போதும் ஒரு கண் ஒரு பக்கம் வைத்துக் கொண்டிருக்கும் அதே நேரம் அவற்றைச் சிறு குறிக்கோள்களாக பிரித்துக் கையாளுங்கள்.

இதன் மூலம் சிறந்த முறையில் உங்கள் வாழ்க்கையின் பயணம் தேக்கமின்றி நடக்கும்.

மற்றவர்களை சரியாகக் கையாளுவது எப்படி என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உறவுகளில் சிக்கல்களை தீர்த்து அவை சண்டையாக மாறாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

மற்றவர்களுடன் உள்ளக் கருத்து வேறுபாடுகளை சச்சரவுகளைக் களைந்து நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள்.

இதன் மூலம் உறவுகள் நீடிக்கும். தொடர்பை மதியுங்கள்

எங்கே சென்றாலும் மக்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். யார் எப்போது நம் வாழ்வில் தேவைப் படுவார்கள் என்பது நமக்குத் தெரியாது.

அனைவரையும்  நினைவில் கொள்கின்ற ஒரு நபராக இருக்க முயலுங்கள்.

அனைவருடன் இணைந்து செயல்புரிய விரும்பும்   ஒருவராக இருங்கள்.

வாய்ப்புகளை மற்றவர்களுக்கு முன் கண்டறியுங்கள் மற்றவர்கள் செய்ய இயலாத அல்லது செய்திராத செயலைச் செய்யவும் முயற்சி செய்யுங்கள்.

ஆம்.,தோழர்களே .....,

இந்த உலகம் இதுவரை பார்த்திராத ஒன்றைக் காட்ட அல்லது செய்ய முயற்சி செய்யுங்கள்.

வெற்றி நிச்சயம் !



Contact

Happy Jobss
#15, North Veli Street, Madurai-625001

7373993339 / 8489298080 / 8489498080


Job Opening - Digital Marketing Manager

  One of the leading Healthcare facility in Madurai is Looking for Digital Marketing Manager Experience: - 0-1 year. Location:-  Madurai. Ro...